ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினையை தீர்ப்பதற்கு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட  முன்மொழிவு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு அல்ல என்றும் ஆசிரியர்களின் ஒன்லைன் வேலைநிறுத்தம் உட்பட தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என்றும் ஆசிரியர் மற்றும் அதிபர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டணி தெரிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டு சம்பள முன்மொழிவையும் ஒரே நேரத்தில் சமர்ப்பிக்குமாறு ஆசிரியர் சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என்றும் கூட்டணி குற்றஞ்சுமத்தியுள்ளது.

சேவைத் தரம், கௌரவம் மற்றும் வாழ்க்கைச் செலவுக்கு இணையான சம்பளத்துக்கான போராட்டத்தை ரூ .5,000 ஆக குறைக்க ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள் தயாராக இல்லை என்று கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க பிரதிநிதிகள் இன்று (31) தெரிவித்தனர்.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்க்க அமைச்சரவை நேற்று (30) எடுத்த முடிவுகள் குறித்து கருத்து தெரிவிக்க இன்று (31) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டது.

பிரச்சினையை தீர்க்க அமைச்சரவை மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சரால் முன்வைக்கப்பட்ட திட்டங்களை நிராகரிப்பதாக  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இதன்போது தெரிவித்தார். 

தமிழ் மிரர் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.