தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் மூடப்பட்டுள்ள தபால் மற்றும் உப தபால் அலுவலகங்கள் இன்றும் நாளையும் (01, 02)  திறக்கப்படும்.

இதற்கமைவாக ஆகஸ்ட் மாதத்திற்கு செலுத்தப்பட வேண்டிய மீதமுள்ள பொது உதவி கொடுப்பனவு, முதியோர் கொடுப்பனவு உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளும் இன்றும் நாளையும் வழங்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

குறித்த இரு தினங்களில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்களும் திறக்கப்பட்டிருக்கும். இவ்விரு தினங்களில் கொடுப்பனவை பெற்று கொள்ளுமாறும் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொடுப்பனவை பெற்றுக்கொள்ள செல்லும் போது சுகாதார விதிமுறைகளை பேணி தபால் நிலையங்களுக்கு செல்லுமாறும் திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.(Siyane News)

அரசாங்க தகவல் திணைக்களம்


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.