தொலைந்து போன அந்த நாட்களை ஞாபக படுத்த வேண்டாம் - சிரிப்பு மட்டுமே சிறகடிக்க
 சிந்தனைகள் வண்ணமடிக்க
 ஒரு தாய் சேய் போல ஓடிய அந்த தருணங்கள்தாம் நியாபகத்தில் மிகவும் வலிக்கும் நாட்கள். 

மீண்டும் ஒரு நாள் வந்திடாதோ - மீன் என்று பேத்தை பிடித்து
பாண் என்று இலையை வெட்டி
தேன் கொஞ்சம் செம்பருத்தியி்ல் திருடி சந்தோசமாய் கழிந்த அந்த பொழுதுகள்? 

 90s' கிட்ஸ் மட்டுமே கொண்டாடிய ஒரு வசந்த காலம் அது. நோண்டிக்கொண்டிருக்க ஃபோன் இல்லை நொண்டி விளையாடவே காலம் போதவில்லை.

கள்ளு குத்தி என்று குடித்தோடிய அந்த தருணம் கனவில் வந்தாலும் போதும் களித்திருப்போம் மனதார.
பொய் சொன்னால் வாயில் புழு வரும் என்றும் விதை உண்டால் வாயில் மரம் முளைக்கும் என்றும் இன்றைய கிட்ஸ் இடம் சொன்னால் நம்மை துரத்தி அடிப்பார்கள்.
 கண்களை விரித்து நம்பினோம் கவலையின்றி வாழ்ந்தோம்.

 FLAMES போட்டு வாழ்கையை கணித்து மகிழ்ந்த அந்த நொடிகள், SOS இல் தோற்ற அந்த வலிகள்.... ஆண்,பெண்,பொருள்,இடம்,காலம் விளையாடிய அந்த வயது... பாட்டுக்கு மெட்டெழுதி பாடிய சுற்றுலாக்கள்....
பாதிலேயே தூங்கிய கார்ணிவேல்...
அப்பப்பா எத்தனை மகிழ்ச்சிகள்....

 கூட்டாஞ்சோறு செய்து அதில் பங்கு பிரித்த நம் விரல்கள் ... புளியம் விதையை சேர்த்து வைத்த நம் வங்கிகள் 
மஞ்சானி தேடி தோட்டத்தில் சுற்றிய நம் கால்கள்
பத்து ரூபாய் போதும் பரவசமாய் வாழ்ந்து வந்தோம், பத்தாயிரம் தந்தாலும் வாங்கிட முடியுமா அந்த நொடிகள்... 

டப்பா டப்பா மாஸ்டர் எப்பெப்ப கல்யாணம்... மாதம் பிறக்கட்டும் மல்லிகை பூ பூக்கட்டும்..
நாம் இயற்றிய பாடல்களும் பேப்பரில் கதை வரைந்து சொல்லிய நம் ஆற்றலும் சினி நடிகர்களுக்காய் சண்டையிட்ட அந்நாட்களும்...
நினைக்கயிலே கன்னம் புன்னகைக்கிறது..

 மருதானியில் நாம் கண்ட அந்த வாசனையும் மடி மீது தூங்கி கதை கேட்ட அந்த பொழுதுகளும்
ஜம்போலக்காயில் உப்பு போட்டு சுவைத்த அந்த இனிப்பும் இனி  கோடி கொடுத்தாலும் கிடைக்காது...... இனி நாடி வரவும் மாட்டாது.....

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.