கொவிட்-19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையும், வைரஸ் தொற்றினால் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கையும் தற்போது குறைவடைந்துள்ளன. இவ்வாறான நிலையில் பாடசாலைகளை சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய கட்டம் கட்டமாக திறக்க முடியும் என சுகாதார அமைச்சு கல்வி அமைச்சுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களின் கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய இரு பிரதான விடயங்களையும் கருத்திற் கொண்டு பொறுப்புடன் செயற்படுவது அவசியமானது என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன்பிரகாரம் பாடசாலைகளை மீள திறத்தல் மற்றும் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லும் விதம் தொடர்பிலான சுகாதார வழிகாட்டல் அடங்கிய பரிந்துரைகளை கல்வி அமைச்சிடம் சுகாதார அமைச்சு கையளித்துள்ளது.

பாடசாலைகளை ஆரம்பிக்கும் நடைமுறை நான்கு கட்டங்களாக வேறுப்படுத்தப்பட்டு அது தொடர்பில் விளக்கமளித்து கல்வி அமைச்சுக்கு அறிவித்துள்ளது.
இராஜதுரை ஹஷான், வீரகேசரி 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.