(அஷ்ரப்.ஏ ஸமத்)

கொழும்பில் உள்ள  ஐக்கிய அரபு இராச்சிய தூதுவா் அலுவலகத்தின் சார்ஜ் டி அபயாா்ஸ் (தூதுவர் அலுவலக பொறுப்பதிகாரி)  ஹூமைட் அல்டாமி  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சா் ரியா் அட்மிரல் சரத் வீரசேகரவை பத்தரமுல்லையில் உள்ள  அமைச்சில் வைத்து 23.09.2021 சந்தித்தாா்.

இச் சந்திப்பின்போது இலங்கை -துபாய் நாட்டினது  நீண்டகால உறவு மற்றும் பொருளாதாரம் ,சர்வதேச பாதுகாப்பு சட்டம் ஒழுங்கு போன்ற துறைகளுக்கு துபாய் ஒத்துழைப்பினை வழங்குதல் போன்ற விடயங்கள் அங்கு கலந்துரையாடப்பட்டன.

இச் சந்திப்பின்போது பேராசிரியா் ரோஹான் குனரத்தின, அமைச்சின் ஆலோசகா் அமைச்சின் அதிகாரிகள்   நாராட சமரசிங்க மற்றும் அன்சாா் மௌலானா, அசான் மல்லசேகர ஆகியோறும் கலந்து கொண்டனா்.
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.