இன்றைய(24) ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்த கருத்துக்களின் ஒரு பகுதி:

நமது நாட்டின் எரிசக்தி ஆற்றலைப் பற்றி பேசும்போது, ​​அது 100% இலங்கை மின்சார சபையால் பூரணப்படுத்தப்படுகிறது.  எழுபது ஆண்டுகளாக அரசாங்கம் என்ன செய்தது என்று சிலர் கேட்கிறார்கள். அந்த நேரத்தில் 77 நம் நாடு இருளில் இருந்தது. அந்த நேரத்தில் திரு. ஜே.ஆர். நம் நாட்டை மாறினார்.இறுதியில் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க சந்திரனில் இருந்து அரிசி கொண்டு வருவதாக கூறி ஆட்சிக்கு வந்தார்.  1977 வரை, நம் நாட்டின் வருடாந்த அரிசி தேவையில் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது. சுமார் ஒரு மில்லியன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டது. துரித மகவெலி அபிவிருத்தித் திட்டத்தால் அரசியில் தன்னிறைவு கொண்ட நாடாக ஜே.ஆர் மாற்றினார்.மகவெலி அபிவிருத்தித் திட்டத்தால் எரிசக்தி உற்பத்திக் கட்டமைப்பும் ஆரம்பிக்கப்பட்டது.கொத்தலே 200 மொகாவோட்டும்,விக்டோரிய 210 மெகாவோட்டும் ரந்தெனிகல 126 மெகா வோட்டும் என்ற அடிப்படையில் கிட்டத்தட்ட 713 மெகாவோட் கொண்ட எரிசக்தி இலங்கையில் தேசிய மின்சார கட்டமைப்பிற்கு மகாவலி திட்டம் மூலம்  பெற்றது.  நாட்டுக்கு எரிசக்தி ஆற்றல் முக்கியம்.அதன் கட்டுப்பாட்டை அரசாங்கம் இழந்தால், அதன் இறையாண்மை, பொருளாதார நிலைத்தன்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு என்பன பாதிக்கப்படும்.  

நம் நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக, இந்த அரசாங்கம் ஒரு மதிப்புமிக்க மின் நிலையத்தை நள்ளிரவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அமெரிக்காவிடம் ஒப்படைக்க முயற்சிக்கிறது.  இது யுகதானவி மின்நிலையமாகும் இதையே அரசாங்கம் இவ்வாறு விற்க முற்படுகிறது. இங்குள்ள அடுத்த பிரச்சினை இது மட்டுமல்ல. எதிர்கால மின் நிலையங்களும் இவ்வாறே கொடுக்கப்படும். குறிப்பாக எல் என் ஜி உற்பத்தியின் ஏகபோகம் அமெரிக்காவிற்கு சென்றுவிடும்.ஏகபோகத்தை அமெரிக்க நியூபோர்ட்ரெஸ்ட் நிறுவனத்திடம் ஒப்படைப்பது மிகவும் ஆபத்தானது. 

அமெரிக்கா நினைப்பது போல், சி இ பி ஊழியர்கள், CEB மின்மாற்றியை அணைக்கவும் ஒளிஊட்டவும் அதிகாரம் கொண்டுருக்கும்,நிறுவனத்தை கட்டுப்படுத்த முடியும்.  இது போன்ற ஒரு இலாப நோக்கற்ற நிறுவனத்தை விற்பனை செய்யும் ஒரு அரசாங்கத்தை முதலில் கேள்விப்படுவது இது தான் முதற்தடவை.தங்க முட்டைகள் இடுவதையும் ஒரே நேரத்தில் சில முட்டைகளை வாங்குவதையும் நாம் இதுவரை பார்த்ததில்லை. அமைச்சரவைக்கு இது பற்றி தெரியாது. எதிர்க்கட்சி இது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது மிஸ்டர் கப்ரால் தான் முன்பு வந்து பதிலளித்தார். அப்போதைய மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் திரு.டலஸ் அழகப்பெரும பதில் சொல்ல வரவில்லை. பதிலளித்தது திரு.கப்ரால் தான். டலஸ் அழகப்பெரும மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டியிருந்ததற்குப் பிரதான காரணம் இதுதான். அவர் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டதால் டலஸ் அலகப்பெருமவை அமைச்சிலிருந்து மாற்றினார்கள்.இந்த மின் உற்பத்தி நிலையத்தை விற்பனை செய்வதை எதிர்த்ததார்.எனவே எதிர்காலத்தில் இதற்காக நாங்கள் போராடுவோம். இது எதிர் காலத்துடன் தொடர்பானது. 

எதிர் வரும் திங்கட்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களுக்குச் சென்று இது குறித்து தெளிவூட்டி எமது நிலைப்பாடுகளை அவர்களிடம் தெரிவிப்போம்.

இந்த அரசாங்கம் நாட்டைத் திறக்கும் என்று கூறுகிறது.கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை வைப்பதாக கூறுகின்றனர்.ஆனால் சரியான திகதிகளை கூறுகிறார்கள் இல்லை.மாணவர்கள் திகதிக்கு ஏற்ப்ப ஆயத்தமாக வேண்டியுள்ளனர்.அதற்குத் தயாராவதற்கு குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை.  ஒன்றரை வருடங்கள் மூடப்பட்ட பாடசாலைகளால் கல்வி பூஜ்ஜிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.கல்வி வீழ்ச்சியடைகிறது, இதன் தாக்கம் பல தசாப்தங்களுக்கு தொடரும், தொழில் வல்லுநர்களின் தோற்றம் குறையும், குழந்தைகளின் மனநிலை பாதிப்படையும்.குறைந்து கொள்கை ரீதியாக தீர்வுகளை வழங்கி உடனடியாக கல்வியைத் தொடரும் செயற்பாட்டுக்குச் செல்லுங்கள்.  குறைந்தபட்சம் அடுத்த மாதத்திலிருந்து கல்வி நடவடிக்கைகளைத்  தொடர வாய்ப்பை வழங்குங்கள்.

(Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.