அடுத்த வருடம் ஜனவரி மாதம் வரை நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இருக்காது என்றும் அதுவரை எரிபொருள் விநியோகத்துக்கு உத்தரவாதம் அளிப்பதாகவும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எண்ணெய் பற்றாக்குறை இருக்கும் என்று பொய்களை பரப்ப வேண்டாம் என்றும் அவர் எதிர்க்கட்சிகளை கேட்டுக் கொண்டார்.

அன்னிய செலாவணி நெருக்கடியால் உலக நாடுகள் முதலில் எண்ணெய் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன என்றும் மட்டுப்படுத்தப்பட்ட அந்நிய செலாவணி முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை ஒதுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதால் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் குறிப்பிட்டார்.

எரிசக்தி அமைச்சில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தார்.

தமிழ் மிரர் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.