ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள், உயர்க் கல்வி பயில்வதற்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு மட்டுமே செலுத்தப்படுமென கொவிட்-19 தொற்றொழிப்பு ஜனாதிபதி செயலணியின் பிரதானியான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அவ்விரு வகையான தடுப்பூசிகளில் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக, தாங்கள் வெளிநாட்டுக்கு கல்விப்பயிலுவதற்காக செல்கின்றோம் என்பதற்கான கடிதத்தை காண்பிக்கவேண்டும்.

இவ்விரு வகையான தடுப்பூசிகளும் இராணுவத்தால் தற்போது வழங்கப்படுகின்றது.

உள்ளூர் பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கு ஃபைசர் மற்றும் மொடர்னா ஆகிய தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பில் இதுவரையிலும் எவ்விதமான தீர்மானங்களும் எட்டப்படவில்லை என்றும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.  

(தமிழ் மிரர்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.