தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100) (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2021 யூலையில் 6.8 சதவீதத்திலிருந்து 2021 ஓகத்தில் 6.7 சதவீதத்திற்கு சிறிதளவில் வீழ்ச்சியடைந்தது.

இவ்வீழ்ச்சி முற்றிலும் 2020 ஓகத்தில் நிலவிய உயர் தளத்தின் புள்ளிவிபர விளைவு காரணமாகவே வீழ்ச்சியடைந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கம், 2021 யூலையில் 11.0 சதவீதத்திலிருந்து 2021 ஓகத்தில் 11.1 சதவீதத்திற்கு சிறிதளவில் அதிகரித்ததுடன் உணவல்லாப் பணவீக்கம், 2021 யூலையில் 3.2 சதவீதத்திலிருந்து 2021 ஓகத்தில் 3.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

ஆண்டுச் சராசரியின் அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண், 2021 யூலையில் 5.4 சதவீதத்திலிருந்து 2021 ஓகத்தில் 5.5 சதவீதத்திற்கு சிறிதளவில் அதிகரித்தது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம், உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் விலைகளில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்களின் காரணமாக 2021 ஓகத்தில் 0.36 சதவீதத்தினைப் பதிவுசெய்தது. மேலும், உணவு மற்றும் உணவல்லா வகைகளின் மாதாந்த மாற்றங்கள், முறையே 0.25 சதவீதத்தினையும் 0.11 சதவீதத்தினையும் பதிவுசெய்தன. அதற்கமைய, உணவு வகையினுள் சீனி, உருளைக்கிழங்கு மற்றும் உடன் மீன் என்பவற்றின் விலைகள் அதிகரித்த அதேவேளை அரிசி, தேய்காய் எண்ணெய் மற்றும் தேங்காய் என்பவற்றின் விலைகள் வீழ்ச்சிகளைப் பதிவுசெய்தன. மேலும், உணவல்லா வகையிலுள்ள பொருட்களின் விலைகளில், பிரதானமாக வெறியக் குடிவகைகள் மற்றும் புகையிலை (பாக்குகள்) மற்றும் நலம் (தனியார் வைத்தியசாலைஃ மருத்துவமனை அறைக் கட்டணங்களுக்கான கொடுப்பனவுகள்) போன்ற துணை வகைகளில் மாத காலப்பகுதியில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்கள் காரணமாக அதிகரிப்பொன்று பதிவாகியது.



இலங்கை மத்திய வங்கி அறிக்கை - https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/press/pr/press_20210921_inflation_in_august_2021_ncpi_t.pdf



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.