இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள 30,000 மெட்ரிக் டொன் நாட்டரிசி, இன்று (17) கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என்று வர்த்தக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மீதமுள்ள அரிசி கையிருப்பு, இந்த மாதம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
அத்துடன், இந்தியாவிலிருந்து 50,000 மெட்ரிக் டன் பொன்டி சம்பா அரிசி விரைவில் இறக்குமதி செய்யப்படும் எனவும் கூறினார்.
இந்த அரிசி கையிருப்புகள், சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் சலுகை விலையில் மக்களுக்கு விநியோகிக்கப்படும் என்று வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
தமிழ் மிரர்