தேசிய விவசாயம் தொடர்பாக வகுக்கப்பட்டுளள கொள்கை நாளை (04) விவசாய அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித்தகே ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
நிபுணர் குழு மேற்கொண்ட நீண்ட ஆய்வுகளின் பின்னர் இந்தக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மக்களின் அபிப்பிராயங்களும் இதில் உள்வாங்கப்பட்டுள்ளன. தேசிய விவசாய கொள்கை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித்தகே ஜயசிங்க மேலும் தெரிவித்தார்.