கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதன் பின்னர் இறக்குமதி பால் மாவுக்கான புதிய விலை பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதன் பின்னர் இறக்குமதி பால் மாவுக்கான புதிய விலை பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலையை 350 ரூபாவினாலும் 400 கிராம் பால் மா பெக்கெட் ஒன்றின் விலையை 140 ரூபாவினாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினரான லக்ஷமன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இறக்குமதி பால் மா ஒரு கிலோ கிராம் 1300 ரூபாவுக்கும் மற்றும் 400 கிராம் பால் மா பெக்கெட் 520 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ள நிலையில் இது தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், நிதி அமைச்சினால் ஏதாவது வரி அறவீடு மேற்கொள்ளப்பட்டால் இந்த விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என லக்ஷமன் வீரசூரிய மேலும் தெரிவித்தார்.

அததெரண 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.