தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை கடுமையாக செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வார இறுதி நீண்ட விடுமுறையை முன்னிட்டு அனைத்து மாகாண எல்லைகளிலும் போக்குவரத்து நடவடிக்கைகளை தீவிர சோதனைக்கு உட்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இன்று (15) முற்பகல் கொவிட் தடுப்பு விசேட குழுவுடன் காணொளி தொழிநுட்பம் ஊடாக இடம்பெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

அததெரண 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.