வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இல்லை எனின் அது தொடர்பான முறைப்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்க முடியும்.
எதிர்வரும் ஒக்டோபர் 21ஆம் திகதி முதல் நவம்பர் 17ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் உங்களது முறைப்பாடுகளை, தேர்தல்கள் ஆணைக்குழுவில் முன்வைக்கலாம்.
ஏற்கெனவே மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல் அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் பிரதேச சபைகள் மற்றும் கிராம சேவையாளர் அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
2021 வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கிறதா என்று ஒன்லைன் இல் பரிசீலிப்பதற்கு : https://eservices.elections.gov.lk/pages/myVoterRegistrationDraft.aspx