கொரோனா மரணங்கள் அதிகரிப்பு : இது சாதாரண விடயம் அல்ல - ஹேமந்த ஹேரத்

Rihmy Hakeem
By -
0

 கொரோனா மரணங்கள் அதிகரித்துள்ளதாகவும் இது சாதாரணமான விடயம் அல்ல என்றும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

கொரோனா நோய்த் தொற்றுகளின் அதிகரிப்பு காரணமாக மரணங்கள் அதிகரித்தனவா என்பதை ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

மரணங்களின் அதிகரிப்பு தொடர்பில் இந்த கட்டத்தில் திட்டவட்டமாக எதையும் கூற முடியாது என்றும், கொரோனா மரணங்களில் ஏற்ற இறக்கங்கள் சாதாரணமாக நிகழக்கூடும் என்றும் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்வது மிகவும் முக்கியமானது எனவும், தொற்றுநோயியல் பிரிவு, மரணங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கையளிக்கும் எனவும் தெரிவித்தார்.

நமக்கே தெரியாமல் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா என்பது சந்தேகமே என்று தெரிவித்த அவர், இந்த நிலை காரணமாக அனைவரும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

Tamilmirror 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)