அத்தனகல்ல பிரதேச சபையின் கஹட்டோவிட்ட வட்டார உறுப்பினர் நஜீப்தீனின் முயற்சியால், பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் வறிய மாணவர்களுக்கு பிரதேச சபையால் வழங்கப்படும் புலமைப்பரிசிலின் கீழ் கஹட்டோவிட்ட பிரதேசத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மூன்று பேருக்கு புலமைப்பரிசில் வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த 20 ஆம் திகதி நடைபெற்றது.

குறித்த மாணவர்களுக்கு மாதாந்தம் 2000/= ரூபாய் வீதம் புலமைப்பரிசில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த நிகழ்வில் அத்தனகல்ல பிரதேச சபை தலைவர் பிரியந்த புஷ்பகுமார கலந்து கொண்டதுடன் மாணவ மாணவிகளுக்கான புலமைப்பரிசிலை வழங்கி வைத்தார்.

படங்கள் : கஹட்டோவிட்ட நியூஸ் பேஜ் ஒபீசியல்
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.