தொம்பே தொகுதி உற்பத்தி கிராமங்களின் பயனாளிகளுக்கு 35 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைப்பு

Rihmy Hakeem
By -
0

 (ரிஹ்மி ஹக்கீம்)

ஜனாதிபதியின் "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைப் பிரகடனத்தின் அடிப்படையில் கம்பஹா மாவட்டம், தொம்பே தேர்தல் தொகுதியில் தியவால, போகஹவத்த, பண்டாரநாயக்கபுர ஆகிய பிரதேசங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்படும் வாகனம் பழுதுபார்க்கப்படும் புதிய கிராமத்தின் பயனாளிகளுக்கு மற்றும் மூங்கில் உற்பத்தி கிராமத்தின் பயனாளிகளுக்கு உபகரணங்கள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு தொம்பே பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது 35 இலட்சம் ரூபாவிற்கு அதிக பெறுமதியுடைய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக, தொம்பே பிரதேச சபை தவிசாளர் பியசேன காரியப்பெரும, தொம்பே பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் M.C.ஜயதிஸ்ஸ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.







கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)