கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கிள் நிறுவனம் மூலம் வருடாந்தம் நடாத்தப்பட்டு வரும் வறிய ஆண் பிள்ளைகளுக்கான இலவச கத்னா நிகழ்வு கொவிட் அச்சுறுத்தல் காரணமாக சென்ற வருடம் நடைபெறவில்லை.
இந்நிலையில் இவ்வருடத்திற்கான கத்னா நிகழ்வு 2021 டிசம்பர் நடுப்பகுதியில் இடம்பெறவுள்ளதுடன் அதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்படுகின்றன.
விண்ணப்பிப்பவர்கள் தம்முடைய விபரங்களை (பெயர், முகவரி, குழந்தையின் வயது) உள்ளடக்கிய விண்ணப்பம் ஒன்றை கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில் நிறுவனத்தில் திங்கள் முதல் சனி வரை காலை 8.30 - மாலை 4.30 வரை ஒப்படைக்கலாம் என்று கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில் மற்றும் சியன ஊடக வட்டத்தின் தலைவருமான அல்ஹாஜ் அஹ்மத் முனவ்வர் தெரிவித்தார்.
கம்பஹா மாவட்டத்திலுள்ள கிராமங்களான கஹட்டோவிட்ட, ஓகொடபொல, உடுகொட, திஹாரிய,கல் - எளிய நாம்புளுவ, பஸ்யாலை, எல்லளமுல்ல பகுதிகளிலுள்ள எளிய ஆண் சிறுவர்கள் இதில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (Siyane News)