பைஸர் தடுப்பூசி மக்களுக்கு தீங்கு விளைவிக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண(Tissa Vitharana) தெரிவித்துள்ளார்.

எனவே அரசாங்கம் மாற்று வழிகளைத் தேட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பைஸர் தடுப்பூசி ஒரு RNA தடுப்பூசி, மரபணு மனித உடலில் நேரடியாக செலுத்தப்பட்ட பின்னர் அது எவ்வாறு செயற்படும் என்பதை எவராலும் கணிக்க முடியாது.

முதன்முறையாக மனிதர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு தடுப்பூசிகளில் RNA பயன்படுத்தப்பட்டுள்ளது, ஒரு மருத்துவ நிபுணராக தனக்கு பைஸர் தடுப்பூசி தொடர்பில் சந்தேகம் இருக்கின்றது.

எனவே பைஸர் தடுப்பூசிகளை தொடர்ச்சியாக இறக்குமதி செய்வதற்குப் பதிலாக மாற்று வழிகளைத் தேட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்வின்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.