ஸஹ்ரானிற்கு சம்பளம் வழங்கியதை பிரதமர் மஹிந்த ராஜபக்ச (கண்டி) கெட்டம்பே ராஜோபன்னராமவில் வைத்து ஏற்றுக்கொண்டார். அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவும் ஊடக விவாதமொன்றில் அதனை ஏற்றுக்கொண்டார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

நேற்று (11) இடம்பெற்ற பாராளுமன்ற விவாதத்தின் போது அமைச்சர் சரத் வீரசேகரவிற்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவும் தான் இராணுவ தளபதியாக இருந்த 2010 வரையான காலப்பகுதியில் ஸஹ்ரானிடமிருந்து எவ்வித உதவிகளும் பெற்றுக்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்துள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

இது தவிர, குறித்த விவாதத்தின் போது எமது பிரதமர் தலதா மாளிகையின் பின்னால் இருந்த நிலையில், ஸஹ்ரான்களுக்கு புலனாய்வு பிரிவு சம்பளம் வழங்கியுள்ளது என்று சொல்லவில்லையா? அப்படியாயின் ஸாதியா என்ற பெண் புலனாய்வு பிரிவினரை கண்டிருக்கலாம் அல்லவா? அப்படியாயின் எவ்வாறு இல்லை என்று கூறலாம் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ  தெரிவித்தார்.

(Siyane News)
சஹ்ரானுக்கு இத்தனை பேர் சம்பளம் வழங்கினார்களா? சபையில் வெளியான தகவல்...

Posted by UTV HD on Thursday, November 11, 2021

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.