மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டத்தில் தற்பொழுது நிறைவு செய்யப்பட்டுள்ள பிரதான இடமாற்றமான மீரிகம  இடமாற்றத்திற்கான நுழைவு வீதியின்    நிர்மாணப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஆராய்வதற்காக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (22-12-2021) மீரிகம இடைமாற்று பகுதிக்கு விஜயம் செய்தார்.  

மீரிகம - குருநாகல் அதிவேகப் பாதை திறந்துவைக்கப்பட்டதைத் தொடர்ந்து மீரிகமவில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மீரிகமவில் இருந்து இடைமாற்று மத்திய நிலையம் இடைப்பாதையொன்றை நிர்மாணிப்பது   தொடர்பில் அமைச்சர் இந்த விஜயத்தின் போது கவனம் செலுத்தினார். மீரிகமவில் அமைக்கப்பட்டுள்ள வாகன தரிப்பிடத்தையும்  அமைச்சர் பார்வையிட்டார்.

இந்நிகழ்வில்  பாராளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கருத்துரையிடுக

Blogger இயக்குவது.