இறக்குமதி பால் மாவை ஏற்றி வரும் கப்பல்களின் தாமதம் மற்றும் களஞ்சிய கட்டணங்கள் அதிகரிப்பு காரணமாக பால் மா தட்டுப்பாடு இன்னும் இரண்டு மாதங்களுக்கு தொடரக்கூடும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவை கொள்வனவு செய்வதற்கு டொலர்கள் இல்லாததால் வங்கிகள் ஊடாக கடன் கடிதங்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான தட்டுப்பாடு காரணமாக நுகர்வோர் அசௌகரியங்களுக்கு உள்ளாவதை தடுக்க உள்நாட்டு பால் மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பால் மா இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார மேலும் தெரிவித்தார்.

அததெரண 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.