வசதி குறைந்த பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு (25) சனிக்கிழமை காலை கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில் (MLSC) மண்டபத்தில் நடைபெற்றது. 

MLSC பொருளாளர் அல்ஹாஜ் பயாஸின் வேண்டுகோளின் பேரில் பிரபல சமூக சேவையாளர் ஜுமாத் ஹாஜியாரினால் மேற்படி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் MLSC உப தலைவர் அல்ஹாஜ் அதாஉல்லாஹ், மெளலவி இல்ஹாம், அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் புளத்சிங்ஹல, கஹட்டோவிட்ட 369 கிராம சேவகர் ஜனக்க சுதர்சன உட்பட மேலும் பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

கிராம சேவகர் ஜனக்க சுதர்சனவுக்கு பரிசு ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

 கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயம், கஹட்டோவிட்ட முஸ்லிம் மகளிர் வித்தியாலயம். உடுகொட அறபா மகா வித்தியாலய மாணவ மாணவிகள் கற்றல் உபகரணங்களைப் பெற்றுக் கொண்டனர். (Siyane News)










கருத்துரையிடுக

Blogger இயக்குவது.