Update: கஹட்டோவிட்ட MLSC இல் இலவச கத்னா நிகழ்வு நாளை இடம்பெறும்!

Rihmy Hakeem
By -
0


கஹட்டோவிட்ட MUSLIM LADIES STUDY CIRCLE இல் வருடா வருடம் நடைபெற்று வருகின்ற வறிய சிறுவர்களுக்கான இலவச கத்னா நிகழ்வு, நாளை (19) ஞாயிற்றுக்கிழமை காலை  9.00 – 12.00 நடைபெறவுள்ளது.

18வது வருடமாக நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில் ஸ்தாபக தலைவரும், சியன ஊடக வட்டத்தின் தலைவரும், இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளரும், தற்போதைய ஆலோசகருமான அல்ஹாஜ் எம்.இஸட்.அஹ்மத் முனவ்வர் தலைமை வகிப்பார்கள்.

களுபோவிலை வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை பிரிவை சேர்ந்த சிரேஷ்ட வைத்தியர் டாக்டர் அஹ்மத் ரிஷி வருகை தரவுள்ளார்.

நிகழ்வில் ஊர் மக்கள் சுகாதார விதிமுறைகளை பேணி கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். (Siyane News)


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)