அஸ்ஸாலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு.

2021.12.11

ஒவ்வொரு பருவத்தினரும் குறிப்பிட்ட அந்தந்த வயது, பருவத்திற்கேற்ப கதைகளை வாசிப்பதில் அதிகமாக ஆர்வம் காட்டுவார்கள். உண்மையில் கதைகள் வாசிப்பவர்களின் சிந்தனையாற்றலையும், கற்பனை திறனையும், தேடலையும் வளர்ப்பதில் பெறும் பங்கேற்கின்றது. 

அதிலும் முக்கியமாக சிறுவர்களின் அறிவு, கற்பனை, சிந்தனை, தேடல் வளர்ச்சியில் முக்கியமான இடத்தை பிடிப்பது கதைகள் என்பதை மறுக்க முடியாது. அதேபோல இவற்றை வளர்க்கக் கூடிய கதைகள் மிக அரிதாகவே வெளியிடப்படும் என்பதும் இன்னுமொரு மறுக்க முடியாத உண்மை.

அந்த அடிப்படையில்,  சில நாட்களுக்கு முன் என்னை வந்தடைந்தது ஒரு சிறந்த புத்தகம், ஆசிரியர் Rumman Azm  அவர்கள் எழுதி ஓவியர் Sara Ya   அவர்களால் விளக்கப்படங்கள் வரைந்து அண்மையில் வெளியிடப்பட்ட
 " little animal series - Book 01  "
" little beb's wish " என்ற இந்த சிறுவர் புத்தகம்.

பத்துப் பக்கங்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தில் " ஒரு குட்டிச் சிலந்தி, அந்த குட்டிச் சிலந்தியை பள்ளிக்கூடம் அனுப்புவதற்கு தேவையான பொருட்களை அதன் பெற்றோர் ஏற்பாடு செய்யும் ஒரு கதையை இந்தப் புத்தகம் உள்ளடக்கியுள்ளது. கதையின் இறுதியில் சிலந்திக்கு காலணிகள் வாங்கத் தேர்ந்தெடுக்கும் போது சிலந்திகளுக்கு 8 கால்கள் இருப்பதை நூலாசிரியர் சித்தரிக்கின்றார்."

உண்மையில் மிகவும் வித்தியாசமான முறையில் நூலாசிரியர் இந்த புத்தகத்தை வடிவமைத்துள்ளார். இந்த புத்தகம் சிலந்தியை வைத்து எழுதப்பட்டுள்ளது. பல படிப்பினைகள் உள்ள ஒரு பூச்சியை வைத்து இந்த புத்தகம் எழுதப்பட்டதன் மூலமாக நூலாசிரியர் பல விடயங்களை சிறுவர்களின் அறிவிற்கு எடுத்துச் செல்ல முயற்சிக்கின்றார். 

அதாவது தேடலை தூண்டக் கூடிய விதத்தில் சிலந்தியின் செயற்பாடுகள் இருக்கின்றது, சிந்தனையை தூண்டி விடும் வகையில் சில அறிவியல் உண்மைகள் இதில் பொதிந்துள்ளது, அதேபோல கற்பனை வளத்தை தூண்டி விடக்கூடிய வகையில் ஓவியங்கள், விளக்கங்கள். இது போன்ற பல விடயங்களை உள்ளடக்கி அருமையாக இந்தப் புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

குழந்தைகளை கவரக்கூடிய வகையில் பல சிறப்பம்சங்களை உள்ளடக்கி இந்த புத்தகம் வடிவமைக்கப் பட்டுள்ளதால் குழந்தைகளின் சிந்தனை, தேடல் வளர்ச்சியில் இந்த புத்தகம் மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சிந்திக்கக் கூடிய, தேடல் வேட்கையுடைய குழந்தைகளை உருவாக்க விரும்பும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், வழிகாட்டிகளுக்கு இந்த புத்தகம் மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

மிகவும் அரிதாகவே வெளியிடப்படும் இது போன்ற புத்தகங்கள் பலரை வந்தடைவதில்லை என்பது பலரின் கவலை. அப்படி கவலைப்படும் ஒருவராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு இந்த நூலை எத்திவைக்கின்றேன்.

சமூக அக்கறையுடன் செயற்படும் நூலாசிரியரின் சமூகத்திற்கான ஒரு பெரிய பங்களிப்பை வழங்கக் கூடிய ஒரு முயற்சியாகவே இந்த புத்தகத்தை நான் பார்கின்றேன். அந்த அடிப்படையில் இந்த சிறந்த புத்தகத்தை வடிவமைத்த நூலாசிரியர் Rumman Azm மற்றும் ஓவியர் Sara Ya நன்றி கூறி பாராட்டப்பட வேண்டியவர்கள். நன்றிகள்.

இப்படியான புத்தாக்க சிந்தனைகளுடன் பல நுணுக்கமான அறிவியல் விடயங்களை உள்ளடங்கிய உங்கள் அறிவியல் பயணம் தொடர்ந்தும் பலருக்கு பயனளிக்க வாழ்த்துக்கள். உங்கள் பயணம் தொடரட்டும். 

Yaeesh Ahamed 

( இந்த புத்தகத்தை நீங்களும் பெற்று உங்கள் குழந்தைகளை பயனடைய வைக்க விரும்பினால் கீழே இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். 0778409561 )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.