கடந்த மாதம் கம்பளை நகரில் நடைபெற்ற Savate Kick Boxing தேர்வுகாண் சுற்றில் ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவர்கள் மூன்றாவது Pakistan - Srilanka International Savate Kick Boxing Championship போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

ஜூன் மாதம் பாகிஸ்தான் லாகூரில்  நடைபெறவுள்ள இப்போட்டிக்கு SKM பாடசாலையில் சிஹான் MS.வஹாப்தீனின் வழிகாட்டலில் பயிற்சிபெற்ற MACM.பாஸித், JM.மின்ஹான், MIM.நஹ்தீர், சப்ரகமுவ பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞானத்துறை மாணவன் SM.ஆதில் ஆகியோர் தெரிவு  செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கிழக்கு மண்ணிலிருந்து முதன்முறையாக Savate Kick Boxing சர்வதேச போட்டிக்குத்தெரிவு செய்யப்பட்ட வீரர்களாவர்.

இவர்களுக்கான உத்தியோகபூர்வக்கடிதத்தை பாடசாலை அதிபர் MA.ஹலீம் இஸ்ஹாக் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களான அலி ஷியாம், ஜிப்ரி ஆகியோர் முன்னிலையில் கிழக்கு மாகாண சாவாட் சம்மேளன உப தலைவர் றப்பானி மௌலானா, செயலாளர் ஸதாம் ஆகியோர் வழங்கி வைத்தனர்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.