இளைஞர் பாராளுமன்றத்தின் வெளிவிவகார மற்றும் இராஜதந்திர உறவுகளின் பிரதி அமைச்சர் அஹ்மத் ஸாதிக், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முப்தி ஆகியோர் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் இரண்டாவது செயலாளர் (அரசியல்) திருமதி ஆயிஷா அபூபக்கர் ஃபஹாத் உடனான சந்திப்பொன்று பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் , இலங்கை திருநாட்டின் கல்வி, விளையாட்டு, கலாச்சாரம் போன்றவற்றில் இளைஞர்களின் பங்களிப்பு தொடர்பாகவும் மேலும் அதில் உள்ள  தாழ்வுகள் குறித்தும் மேலும் இத்துறைகளில்  பாகிஸ்தான் நாட்டின் இளைஞர்களின் பங்களிப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

கலந்துரையாடலின் பின்னர், இலங்கையின் விளையாட்டு துறை மேலும் வளர்வதற்கான தேவைப்பாடுகள் குறித்தும் விசேடமாக களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு  விளையாட்டு துறையின் வளர்ச்சி குறித்தும் பேசப்பட்டதுடன் அவற்றுக்கான ஆதரவினை எதிர்காலங்களில் வழங்குமாறும் கேட்கப்பட்டது.

இலங்கை பாகிஸ்தானுக்கு இடையிலான உறவு மேலும் இளைஞர்களின் ஊடாகவும் வலுப்படுத்த சிறந்த நடவடிக்கைகள் எதிர்காலங்களில் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.