தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு வருகை தரும் வர்த்தகர்களின் எண்ணிக்கை குறைவடைந்திருப்பதாக அதன் வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது. 

பொதுவாக நாளாந்தம் 30 இலட்சம் கிலோ மரக்கறி சமீப காலத்தில் கிடைத்து வந்தது. இருப்பினும், தற்போது சுமார் 2 இலட்சம் மரக்கறி வகைகளே கிடைத்து வருவதாக சங்கம் தெரிவித்துள்ளது. 



இவற்றைக் கொள்வனவு செய்வதற்கு வருகை தரும் வர்த்தகர்களின் எண்ணிக்கை 70 வீதத்தினால் குறைவடைந்துள்ளது. சமீபத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து பெரும் தொகையில் மரக்கறி வகைகள் கிடைத்து வந்தன. இருப்பினும் நேற்று காலை இரண்டு லொறிகளில் மாத்திரமே அங்கிருந்து வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் பல மரக்கறிகளின் விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ போஞ்சியின் விலை 200 ரூபா தொடக்கம் 210 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ கோவா 60 ரூபா தொடக்கம் 70 ரூபாவிற்கு இடையில் விற்பனை செய்யப்பட்டது. மொத்த விலையும் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்திருப்பதாக விசேட வர்த்தக நிலையம் குறிப்பிட்டுள்ளது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.