தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எதிர்வரும் மார்ச் மாதம் 23ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி உறுதி செய்துள்ளது.

இதேவேளை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கு மாநாட்டுக்கான அழைப்பு விடுக்கப்படவில்லை என, அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் மிரர்


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.