(அஷ்ரப் அலீ)

கொழும்பு , கோட்டையில் கோல்பேஸ் திடலுக்கு அருகாமையில் உள்ள பல வீதிகள் பொலிசாரினால் சற்று முன்னர் மூடப்பட்டுள்ளது.

இரும்பு குழாய்கள் கொண்டு பாதையின் குறுக்காக வேலி போன்று பொருத்தப்பட்டு, பாதைகள் மறிக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக அவற்றை கடந்து செல்வதாயின் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் அவற்றின் உள்ளே குனிந்து புகுந்து நிமிர்ந்து சிரமப்பட வேண்டியுள்ளது.

கோல்பேஸ் திடலை நோக்கி நாளாந்தம் பொதுமக்கள் ஒன்று திரண்டு வருவதைத் தடுக்கும் நோக்கில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அதன் படி தற்போதைக்கு என்.எஸ்.ஏ. சுற்றுவட்டாரம் தொடக்கம் சைத்திய வீதி, என்.எஸ்.ஏ. சுற்றுவட்டாரம் தொடக்கம் ஜனாதிபதி மாவத்தை , செரமிக் சந்தி தொடக்கம் யோர்க் மாவத்தை, ஜீ.ஓ.எச் சந்தி வரை, வங்கி வீதி, செரமிக் சந்தி தொடக்கம் என்.எஸ்.ஏ சுற்றுவட்டாரம் வரை லோட்டஸ் மாவத்தை, கீழ் செதம வீதி, ஜீ.ஓ.எச் சந்தி தொடக்கம்  பிரதான வீதி மற்றும் லேடன் பஸ்தியன் மாவத்தை போன்ற வீதிகள் நிரந்தரமான முறையில் இரும்பு குழாய்கள் கொண்டு வேலியமைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன.

නිර්මාණශීලී තරුණ පරම්පරාවට උඹලා පට්ට බයයි කියලා අපි දන්නවා. අන්තරේ යන්තරේ දැන් තොපේ ලේ පිපාසාව සංසිදින්නේ නෑ කියලා මට...

Posted by Upul Sannasgala on Sunday, April 24, 2022கோட்டை புகையிரத நிலையம்


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.