சமிந்த லக்ஷானின் மரணம் ஒரு கொலை எனவும்,மேலும் அது ஒரு குற்றவியல் சார்ந்த குற்றம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தமது வீட்டுத் தேவைக்காக எண்ணெய் பெற்றுக்கொள்ள வந்த சமிந்தவை கொடூரமாக கொலை செய்த அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் அடக்குமுறை சார்ந்த நடவடிக்கைகளால் ரம்புக்கனையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி பலியாகிய இரு பிள்ளைகளின் தந்தையாரான கரந்தகஸ்தென்ன நாரம்பந்த பிரதேசத்தில் வசித்து வந்த திரு.சமிந்த லக்ஷானின் வீட்டிற்கு சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22) அவரின் பூத உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

தனது கணவரின் மரணத்தால் துயரடைந்துள்ள சமிந்த லக்ஷானின் அன்பு மனைவி மற்றும் அவருடைய இரு பிள்ளைகளுடன் தனது துயரத்தை பகிர்ந்து கொண்ட எதிர்க்கட்சி தலைவர்,இந்த கொலைச் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வர சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

குடும்பத்தின் அத்தியாவசிய எதிர்கால செயற்பாடுகளுக்காக நிதியுதவி வழங்கி வைத்த எதிர்க்கட்சித் தலைவர்,தேவைப்படும் எந்நேரத்திலும் ஐக்கிய மக்கள் சக்தியாகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் அவர்களுக்காக முன்நிற்பதாகவும் இதன் போது உறுதியளித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.