(அப்ஹம் நிஸாம்)

Ogodapola Youth ஏற்பாட்டில் நேற்று மற்றும் இன்றைய தினம் kahatowita பொது மைதானத்தில் நடந்து முடிந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் Badriyans அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Kahatowita, Ogodapola, Udugoda பிரதேசங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 8 அணிகள் பங்குபற்றிய இந்த சுற்று போட்டி நேற்று காலை ஆரம்பமானது.

League சுற்றில் முதலாவது போட்டியில் youth அணியை வெற்றி கொண்ட Badriyans இரண்டாவது போட்டியில் Essex அணியிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. இன்று காலை கட்டாயம் வெற்றி பெறவேண்டிய மூன்றாவது போட்டியில்  HF அணியை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றது.

 இரண்டாவது சுற்றில் JF  அணியை  வீழ்த்தி இறுதிப் போட்டிக்கான தகுதிகாண் போட்டியில் மீண்டும் Essex அணியை எதிர்கொண்டது.

 மிகவும் சிறப்பாக ஆடிய Badriyans அணி அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

 இறுதிப்போட்டியில் Udugoda Jinnah அணியை இரண்டு பந்துகள் மீதமிருக்கும் நிலையில் வீழ்த்தி சாம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

 கடந்த இரு மாதங்களுக்குள் Badriyans அணி வெற்றி பெறும் இரண்டாவது  கிண்ணம் இதுவென்பதுடன்  அண்மைக்காலங்களில்  இவ்விரு அணிகளும் கால்பந்து மற்றும் கரப்பந்து இறுதிப் போட்டிகளில் ஒன்றையொன்று சந்தித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

 கடந்த மாதம் Badriyans அணி ஏற்பாட்டில் நடைபெற்ற சுற்றுப் போட்டியில் ஒரு போட்டியையேனும் வெல்லாத Essex அணி இந்த தொடரில் மூன்றாவது இடத்தை பெற்றதுடன் அதே போட்டித் தொடரில் Badriyans அணியுடன் இறுதி போட்டியில் மோதிய Ogodapola youth அணி இந்த தொடரில் எவ்வித வெற்றியையும் பதிவு செய்யவில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்க விடயமாகும்.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.