அம்பேபுஸ்ஸ - மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தின் ஏற்பாட்டில் கம்பஹா மாவட்டம், மீரிகம பிரதேசத்திலுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கான வீட்டுத்தோட்டம் செய்தல், இயற்கை பசளை தயாரித்தல், வீட்டு வளாகத்தில் காளான் உற்பத்தி செய்தல் என்பன தொடர்பான ஒருநாள் செயலமர்வு இன்று (01) மீரிகம பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மீரிகம பிரதேச செயலாளர் தலைமையில் ஆரம்பமான மேற்படி நிகழ்வில் அம்பேபுஸ்ஸ - மாவட்ட விவசாய பயிற்சி நிலைய அதிகாரிகள், மீரிகம பிரதேச செயலக அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள் உட்பட பிரதேச அரச உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.