இலங்கையில் எதிர்வரும் 12ஆம் திகதி அதாவது நாளைய தினம் (செவ்வாய்க்கிழமை) தேசிய துக்க நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அன்றைய தினம் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக உள்விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் அன்றைய தினம் பொது விடுமுறை அல்ல எனவும் அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேயின் திடீர் மரணம் காரணமாக இவ்வாறு துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : நியூஸ் நவ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.