இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்ட நிறைவில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் பாகிஸ்தான் அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 191 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இலங்கை அணி முதலாவது இன்னிங்சில் 103 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 378 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இலங்கை அணி சார்பில் சந்திமால் 80, திக்வெல்ல 51, பெர்னாண்டோ 50 ஆகிய ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

பாகிஸ்தான் அணி சார்பில் சல்மான் 62 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

மேலும் பாகிஸ்தான் அணி சார்பில் வை.ஷாஹ் மற்றும் என்.ஷாஹ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்களையும் இலங்கை அணி சார்பில் ஆர்.மெண்டிஸ் மூன்று விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.