எதிர்வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, எதிர்வரும் 13ஆம் திகதி பதவி விலகவுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தினேஸ் குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, குமார வெல்கம, டிலான் பெரேரா திரான் அலஸ், டலஸ் அழகப்பெரும, மனோ கணேசன், லக்‌ஷமன் கிரியெல்ல, ரிஷாத் பதியுதீன், உதய கம்மன்பில உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இன்று மாலை நடத்திய கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுக்கள் ஜூலை 19 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும், பின்னர் ஜூலை 20 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.