கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் சட்டவிரோதமான முறையில் எரிபொருளை பதுக்கி வைத்து விற்பனை செய்த 33 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (30) காலை 6 மணி முதல் இன்று (31) காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸார் மேற்கொண்ட 31 விசேட சுற்றிவளைப்புகளில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, 1,108.9 லிட்டர் பெட்ரோல், 1,441 லிட்டர் டீசல், 9 லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவற்றை பொலிசார் பறிமுதல் செய்தனர்.

இதுவரை நாடு முழுவதும் மொத்தம் 1,220 சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதன்போது, 38,029.445 லீற்றர் பெற்றோல், 123,945.411 லீற்றர் டீசல் மற்றும் 19,238.925 லீற்றர் மண்ணெண்ணெய் ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் 1,145 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Adaderaa

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.