முகக்கவசம் அணியாமல் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு வருகை தருபவர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது என எரிபொருள் விநியோகிப்பவர்களின் சங்கம் அறிவித்துள்ளது.

எரிபொருள் விநியோகிப்பவர்களின் சங்கத்தின் இணை செயலாளர் நாவொட்டுன்ன இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில்,  இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த நடைமுறை நாளை முதல் அமுலுக்கு வரவுள்ளதோடு, வரிசைகளில் காத்திருக்கும் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

முகக்ககவசம் அணியாது பஸ்களில் பயணிப்பவர்கள், பொது இடங்களில் நடமாடுபவர்கள், வரிசைகளில் காத்திருப்பவர்கள் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.