இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு

  Fayasa Fasil
By -
0

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார  ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பு சற்றுமுன் நிறைவடைந்துள்ள நிலையில் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதற்கமைய டலஸ் அழகப்பெரும 82 வாக்குகளையும் ரணில் விக்கிரமசிங்க  134 வாக்குகளும் அனுர குமார திசாநாயக்க 3 வாக்குகளும் பெற்றுகொண்டுள்ளனர்.

இன்றைய வாக்களிப்பு நடவடிக்கைகளில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துக்கொள்ளவில்லை. இதன்படி, 223 பேர் வாக்களித்திருந்தார்கள்.

எனினும், 223 வாக்குகளில் 04 வாக்குகள் செலுப்படியற்றவை என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, செலுப்படியாகும் வாக்குகளை, பிரித்து, வாக்கெண்ணும் நடவடிக்கைகள் முடிவுபெற்றன.

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு இன்று(புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)