பதுளை மாவட்டம், எல்ல பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் டிப்பர் சாரதி ஒருவர் அங்கு கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரியை வாகனத்தால் மோதிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

குறித்த வாகனத்தின் இறுதி இலக்கத்திற்கு எரிபொருள் வழங்குவதற்கு பொலிஸ் அதிகாரி மறுப்பு தெரிவித்ததனை தொடர்ந்து குறித்த சாரதி வாகனத்தால் பொலிஸ் அதிகாரியை மோதியுள்ளார். 

உடனடியாக குறித்த பொலிஸ் அதிகாரி வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சாரதி குடிபோதையில் இருப்பது வைத்திய பரிசோதனையில் தெரியவந்துள்ளது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.