எரிபொருள் அட்டைக்காக காத்திருந்தவர் மயங்கி விழுந்து மரணம்!

Rihmy Hakeem
By -
0

 

 (பிரதீபன்)

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் எரிபொருள் அட்டையை பெற காத்திருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வேலணை புளியங்கூடல் பகுதியை சேர்ந்த நடராசா பிரேம்குமார் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தனக்கான எரிபொருள் அட்டையினை பெற்றுக்கொள்வதற்காக ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்கு சென்று காத்திருந்த வேளை திடீரென மயங்கி சரிந்துள்ளார்.

அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஊர்காவற்துறை வைத்திய சாலையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)