பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் சுமார் முப்பத்தெட்டாயிரம் வேன்கள் மற்றும் பேருந்துகளுக்கு தனியான குறியீட்டு இலக்கத்தை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் இந்த முறை அறிமுகப்படுத்தப்படும் எனவும் அதுவரை அந்த வாகனங்களுக்கு தேவையான எரிபொருளை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்கள் வெளியிடும் எனவும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த நேற்று (25) தெரிவித்தார்.

இவ்வாறான முறை அறிமுகப்படுத்தப்படாவிட்டால் வாகன உரிமையாளர்கள் எரிபொருளைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்வார்கள் எனவும் இதன் மூலம் ஒரு வாரத்திற்கு தேவையான எரிபொருளின் அளவை கணக்கிட்டு அந்த தொகையை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். மாணவர்களை ஏற்றிச் செல்லும் கடைசிப் பள்ளியின் அதிபரிடம் வாகன உரிமையாளர்கள் கடிதம் ஒன்றைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், இதன் மூலம் நாளொன்றுக்கு எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டும் என்பது குறித்துத் தெரிந்துகொள்ள முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சுமார் எட்டு லட்சம் மாணவர்கள் இந்த வாகனங்கள் மூலம் ஏற்றிச் செல்வார்கள் என்று தோராயமாக மதிப்பிடப்பட்டுள்ளது. சுமார் பத்து வீதமான மாணவர்கள் தமது தனியார் வாகனங்களில் பாடசாலைக்கு வருவதாகவும் ஏனைய மாணவர்கள் அனைவரும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதாகவும் அமைச்சு கூறுகின்றது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.