முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் தலைமறைவாகவில்லை எனவும் அவர் சட்டரீதியாகவே அங்கு சென்றுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இன்று (26) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் கைது செய்யப்படுவதை தவிர்ப்பதற்கு நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், எப்போது நாடு திரும்புவார் என கேட்கப்பட்ட போது அது தொடர்பில் உறுதியாக தெரியவில்லை என்று அமைச்சர் பதிலளித்தார். (Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.