எரிபொருளுக்காக வாகனத்தை பதிவு செய்ய முடியாதவர்களுக்கு

Rihmy Hakeem
By -
0

Chassis இலக்கம் உள்ள வாகனங்களை பதிவு செய்ய முடியாதவர்கள் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை முதல் வாகன வருமான அனுமதிப் பத்திரத்துடன் பதிவு செய்ய முடியும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன், 49CC இயந்திர திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை வைத்துள்ளவர்கள் தங்களது அனுமதிப் பத்திரத்தை பெற மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தவிர தோட்ட உபகரணங்கள், ஜெனரேட்டர்கள் மற்றும் எரிபொருள் தேவைப்படும் உபகரணங்களை பயன்படுத்துவோர் தங்களின் வாராந்த எரிபொருள் தேவைகளை அந்தந்த பிரதேச செயலகங்களில் பதிவு செய்யுமாறும் அவற்றை பெறுவதற்கான எரிபொருள் நிலையங்களை பரிந்துரைக்குமாறும் கேட்டுக் கொள்வதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.


தமிழன் ரேடியோ

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)