கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இன்று இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகாரமுடையை ஜனாதிபதியை 
தெரிவு செய்வதற்காக  பாராளுமன்றம் காலை 10 மணிக்கு கூடுகிறது 

தனது பதவியை இராஜினாமா செய்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எஞ்சிய காலப்பகுதியை
பூரணப்படுத்துவதற்காக இத்தெரிவு
(தேர்தல்) நடத்தப்படுகிறது.

 நடைபெறும் புதிய ஜனாதிபதி தெரிவை முன்னிட்டு தேர்தலை நடத்தும் பாராளுமன்ற உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பாராளுமன்ற வளவுக்குள் கைத்தொலைபேசியை எடுத்து வருவது தடை செய்யப்பட்டுள்ளது......

இதனை உறுதிசெய்யும் முகமாக இன்று இவர்கள் விசேட பரிசோதனைக்கு உட் படுத்தப்படவுள்ளதாக  பாராளுமன்ற உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.