மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் குடிவரவு அதிகாரிகளும் தமது சேவையில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, மத்தள விமான நிலையம் ஊடாக நாட்டை விட்டு வெளியேறுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தமக்கு கிடைத்த தகவலையடுத்து, அதிகாரிகள், சேவைகளில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த வழியை பயன்படுத்தி முன்னாள் அரசியல் பிரமுகர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக இன்று அதிகாலை பெசில் ராஜபக்ஷ, கட்டுநாயக்கவின் ஊடாக நாட்டில் இருந்து வெளியேற முயற்சித்தபோது, அங்குள்ள அதிகாரிகள், தமது கடமைகளில் இருந்து விலகிக்கொண்டனர்.
கருத்துரையிடுக