போராட்டக்காரர்களை தண்டிப்பதை நிறுத்துங்கள். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவிப்பு.

ஜனநாயக ரீதியான போராட்டக்காரர்களை தண்டனைக்குட்படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாவும், ஜனநாயக நாட்டிற்காக போராடிய போராட்டக்காரர்களை பின்தொடர்வதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.

இந்த தண்டனையின் மூலம் சர்வதேசத்திற்கு செல்லும் செய்தி மிகவும் ஆபத்தானது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்த அபகீர்த்தியினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விட இந்நாட்டின் ஒட்டுமொத்த மக்களே பாதிக்கப்படுவார்கள் எனவும் அவர் வலியுறுத்தினார்.

நேற்று (26) பிற்பகல் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் போராட்ட செயற்பாட்டாளர்கள் குழுவுடனான கலந்துரையாடலின் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

போராட்டத் தலைவர்களின் பின்னால் மிலேச்சத்தனமாக வேவு பார்ப்பதை நிறுத்தி விட்டு அனைத்து போராட்டக்குழுக்களுடனும் ஒரு ஜனநாயக ரீதியான உடன்பாட்டிற்கு வந்து  அவர்களுடன் கலந்துரையாடல்களை  மேற்கொள்ள வழி ஏற்ப்படுத்துமாறும் அரசாங்கத்தை வற்புறுத்துவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டுக்கு ஜனநாயகத்தை பெற்றுக்கொடுக்கவே அவர்கள் போராடினார்கள் என்பதை மறக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.தாராளமய ஆட்சி பற்றி பேசும் ஜனாதிபதி அதனை நடைமுறை ரீதியாக நிரூபிக்குமாறும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.