எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் QR முறைமையின் கீழ் மாத்திரம் எரிபொருளை விநியோகிக்குமாறு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளரினால் சகல மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, பொதுபோக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்காக எரிபொருள் விநியோகிக்கும் அளவு தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்ளும் அதிகாரம் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதே வேளை நேற்று மாலை 4 மணி வரை தேசிய எரிபொருள் விநியோக அட்டையை பெற 4.4 மில்லியன் பேர் பதிவு செய்துக் கொண்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

801 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் QR அமைப்புகள் மூலம் எரிபொருளை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி இதுவரை QR முறைமைகள் ஊடாக 122,469 பரிவர்த்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.