எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 04 அஹதியா பாடசாலைகளுக்கான காசோலை மூலமான புத்தகக் கொடுப்பனவு (Book Allowance) வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நேற்று (06) புதன்கிழமை காலை  இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் தலைமையில், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள கலாசார பிரிவின் ஏற்பாட்டில், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.பர்ஹானின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட 04  அஹதியா பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கலாசாரப் பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.