அடக்குமுறையில் ஈடுபட்ட அரசாங்கத்திற்கு IMF உதவி வழங்குமா? - முஜிபுர் ரஹ்மான் (வீடியோ)

Rihmy Hakeem
By -
0

 

அன்று மஹிந்த ராஜபக்ச மே 09 இல் கோல்பேஸ் போராட்டத்திற்கு தாக்குதல் நடாத்திய போது இந்த ரணில் விக்ரமசிங்க மறுநாள் விட்ட அறிக்கையில், ராஜபக்சர்களுடன் இனி எந்த கொடுக்கல், வாங்கல்களும் இல்லை என்று தெரிவித்திருந்தார். இன்று தான் அதிகாரத்திற்கு வருவதற்காக அவர்களை பயன்படுத்தி ராஜபக்சர்களுக்கு தேவையானதை நிறைவேற்றுகிறார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

IMF இடம் செல்ல வேண்டும். அவர்களது உதவியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால் புதிய அரசாங்கம் என்று கூறிக்கொண்டு அடக்குமுறையில் ஈடுபட்ட இவர்களுக்கு சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்குமா? IMF உதவி செய்யும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? IMF இற்கு தேவையானது சரியான அரசாங்கம் மட்டுமல்ல. மக்களின் ஆதரவுள்ள அரசாங்கம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)